மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

மருத்சங்கிரஹணம்

ஒரு மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள மண்ணை எடுத்து யாகசாலை அமைக்கும் இடத்தைச் சுற்றிப் பரப்பும் சடங்குதான் அது. புதிய ஆலய வளாகத்தின் யாகசாலை முன்னரே அமைக்கப்பட்டுவிடும். பூமாதேவிக்குப் பூஜைகள் நடத்தப்படும்.

அங்குரார்ப்பணம்

புதிய ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படவிருக்கும் பூஜிக்கப்பட்ட ஈர மண்ணில் நவதானியங்கள் தூவப்படும். அந்தத் தானியங்களின் வளர்ச்சி புதிய ஆலயத்தின் செழிப்பைப் பிரதிபலிப்பதாக அமையும்.

ஆச்சார்ய ரக்‌ஷாபந்தணம் மற்றும் வாரணம்

கும்பாபிஷேகச் சடங்குகளை நடத்தும் அர்ச்சர்களுக்குப் பூஜிக்கப்பட்ட பாதுகாப்பு கங்கணங்கள் கைகளில் கட்டப்படும். வாரணம் என்பது கும்பாபிஷேகச் சடங்குகளை நடத்த அழைக்கப்பட்டிருக்கும் அர்ச்சர்களுக்குச் சிறப்பு வஸ்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி.

விமான கலசஸ்தாபணம்

இந்தச் சடங்கில் ஆலய விமானங்களுக்கு மேல் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படும். இந்த நாளில் ஆலயத்தின் ஸ்தபதியார்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.

கும்ப அலங்காரம்

Maha Kumbabishegam

வெள்ளிக் குடம் அல்லது கும்பங்களில் பூஜிக்கப்பட்ட நீர் நிரப்படும். ஆலயத்தில் எத்தனை தெய்வச் சிலைகள் வைக்கப்படுகிறதோ அத்தனை கும்பங்கள் வைக்கப்படும். ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு கும்பம் என்ற முறையில் அவை யாகசாலையில் வைக்கப்பட்டு உரு ஏற்றப்படும். கும்பத்தைச் சுற்றிக் கட்டப்படும் பட்டு, சதை மற்றூம் தோலைக் குறிக்கிறது. குடத்தினுள் இருக்கும் நீர் உடலில் உள்ள ரத்தத்தையும், குடத்தின் மேல் வைக்கப்படும் தர்ப்பைப் புல் எலும்பையும் குறிக்கிறது. குடத்தைச் சுற்றீ கட்டப்படும் நூல், உடல் நரம்புகளைக் குறிக்கிறது. கும்பங்களுக்கு உயிர் கொடுப்பது போல மந்திரங்கள் தொடர்ந்து ஜபிக்கப்படும். மாலைகள், மலர்கள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றைக் கொண்டு கும்பங்கள் அலங்கரிக்கப்பட்டவுடன் கலாகர்ஷணம் சடங்குக்கு அவை தயாராகிவிடும்.

கலாகர்ஷணம்

ஆகம சாஸ்திரத்தின்படி, தெய்வச் சிலைகளில் 16 வெவ்வேறு வடிவங்களில் சக்திகள் உள்ளன. ஆக, தற்போது இருக்கும் இடத்திலிருந்து அவை அகற்றப்படுவதற்கு முன் அவற்றின் சக்திகள் புனித நீர் உள்ள கும்பங்களுக்கு மாற்றப்படும். அலங்கரிக்கப்பட்ட கும்பங்கள் அதனுள் செலுத்தப்படும் தெய்வச் சக்திகளை சீரமைப்புப் பணிகள் முடிவுறும் வரையிலோ புதிய ஆலயத்தில் தெய்வச் சிலைகள் பதிக்கப்படும் வரயிலோ பாதுகாக்கும். பழைய கோயிலில் செய்யப்படும் அனைத்து பூஜைகளுக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல இந்தப் பூஜை அமையும். அதன் பிறகு தொடரும் அனைத்து பூஜைகளும் புதிய ஆலயத்தில் நடத்தப்படும்.

யாத்ரா ஹோமம்

தெய்வச் சக்திகளைக் கொண்ட புனிதக் கும்பங்கள் புதிய ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படும் யாத்திரை சிறப்பாக நடந்தேறுவதற்கு இந்தப் பூஜை நடத்தப்படுகிறது. தெய்வங்களின் சக்தி பரிமாற்றம் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யவும் இந்தப் பூஜை நடத்தப்படுகிறது.

கடம் புறப்பாடு

அலங்கரிக்கப்பட்ட புனிதக் கும்பங்கள் ஊர்வலமாகப் புதிய ஆலயத்துக்குக் கொண்டு செல்லப்படும். அவை அங்குச் சென்று சேர்ந்ததும், சிவாச்சாரியர்கள் அவற்றை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலயில் உள்ள அதனதன் இடத்தில் வைப்பார்கள்.

மஹா கும்பாபிஷேகம்

யாகசாலை பூஜை

அக்னி குண்டம் உள்ள யாகசாலையில் பூஜைகள் தொடங்குவதற்க்கு அனைத்தும் தயாராக உள்ளன. மகா கும்பாபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படும் புனித நீர் கொண்ட கும்பங்கள் அங்கு வைக்கப்பட்டு ஆவாஹனம் செய்யப்படும். காலையிலும், மாலையிலும் புனித தெய்வ மந்திர ஜபங்கள் தொடர்ந்து வாசிக்கப்பட்டு கும்பங்களில் உள்ள தெய்வச் சக்திகளுக்கு உரு ஏற்றப்படும். புனிதக் குடங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டவுடன், அக்னிக் குண்டத்தின் வழி குடங்களில் உள்ள சக்திகளுக்கு உரு ஏற்றப்படும். அக்னிப் பிரதிஷ்டம் எனும் பூஜை முதலில் செய்யப்பட்டு அக்னிக் குண்டத்தில் அக்னி மூட்டப்படும். குண்டத்தில் குச்சிகள், அரசமரம், மாமரம், பலா மரம் ஆகியவற்றின் கிளைகள் போடப்படும். இனிப்புகள், பழங்கள், நெய் ஆகியவையும் அக்னியில் செலுத்தப்படும். அவை ஒவ்வொன்றாக அக்னிக் குண்டத்தில் போடப்படும் போது அர்ச்சகர்கள் அதற்குரிய மந்திரங்களை ஓதுவார்கள். மூலமந்திரங்கள் ஆயிரக்கணக்கில் சொல்லப்படும்போது கும்பங்களில் இருக்கும் தெய்வச் சக்திகளின் வலிமை பெருகும்.

பூர்ணாஹுதி / தீபாராதனை ஆசிர்வாதம்

ஒவ்வொரு நாள் ஹோமத்தின் நிறைவுச் சடங்காக பூர்ணாஹுதி அமையும். பூர்ணாஹுதியை அடுத்து, அர்ச்சகர்கள் ஒமக் குண்டத்திற்கும் கும்பங்களுக்கும் தீபாராதனை காட்டுவார்கள். நான்கு வேதங்களிலிருந்து மந்திர ஜபங்கள் சொல்லப்பட்டு தேவாரப் பாடல்களும் பாடப்படும். அனைத்து பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கப்படும்.

யந்திரஸ்தாபனம்

48 நாட்களுக்குள் யந்திர பூஜைகள் நடத்தப்பட்டு, யந்திரங்கள் அப்போது புதிய ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வப் பீடங்களில் வைக்கத் தயாராகிவிடும். இந்தப் புதிய பீடங்களில்தான் தெய்வச் சிலைகள் பதிக்கப்படும். யந்திரஸ்தாபனம் முடிந்தவுடன், பீடங்களில் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளிக்காசுகள் வைக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறப் பக்தர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.

புதிய தெய்வங்களுக்கு அஷ்டதசக்ரியை

தெய்வச் சிலைகள் மிடுக்காகக் காட்சியளிக்க அவற்றுக்கு 18 வெவ்வேறு வகையான வடிவச் சடங்குகள் நடத்தப்படும். தெய்வச் சிலைகளை நெல்மணி, தண்ணீர், மலர்கள் ஆகியவற்றீல் கிடத்தித் தயார்படுத்தியவுடன், புதுய படுக்கையில் புதிய தலையணை, புதிய போர்வையுடன் அவை “ஓய்வு எடுக்க” வைக்கப்படும். தெய்வச் சிலைகள் பீடங்களில் வக்கப்படுவதற்கு முன், மிகவும் முக்கியமான “நயனோன்மீலனம்” எனும் சடங்கு செய்து அவற்றின் கண்கள் திறக்கப்படும்.

அஷ்டபந்தனம்

தெய்வச் சிலைகளை அதனதன் பீடத்தில் வைத்து ஒரு விதச் சிறப்புப் பசையால் பதிக்கும் சடங்குதான் அஷ்டபந்தனம். செம் பாஞ்சு, வண்ணெய், குங்குலியம் போன்ற 8 விதப் பொருட்களால் செய்யப்பட்ட பசை சம் பீடத்தையும் தெய்வச் சிலையையும் பிணைக்கும். அந்தச் சிறப்புப் பசை காலப்போக்கில் இறுகக்கத் தன்மையைப் படிப்படியாக இழக்க நேரிடும். அதனால்தான், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப் பசை மாற்றப்படுகிறது. அதற்குள் தெய்வச் சிலைகள் பீடத்தில் பதிக்கப்பட்டுவிடும்.

Maha Kumbabishegam

எண்ணெய் சாத்துதல்

மிகவும் அரிதாகக் கிடைக்கும் இந்த வாய்ப்பின்போது பக்தர்கள், தெய்வச் சிலைகளுக்கு அருகம்புல் தூரிகையால் நல்லெண்ணெய் தடவுவார்கள். தெய்வச் சிலைகளுக்கு ஒரு புதிய பொலிவைக் கொடுக்கவே இந்தச் சடங்கு நடத்தப்படுகிறது.

லட்சுமி பூஜை

லட்சுமி தேவியின் அருளும் ஆசியும் கிட்ட இந்தச் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.

பிம்பசுத்தி

மகா கும்பாபிஷேகத்துக்கு முன், அர்ச்சகர்கள் தெய்வச் சிலைகளை ஐந்து வித மண்களாலும், புனித தீர்த்தத்தாலும் சுத்தப்படுத்துவார்கள். இந்தச் சடங்குக்குப் பெயர்தான் பிம்பசுத்தி.

ரக்‌ஷபந்தனம்

மகா கும்பாபிஷேகத்தின்போது தெய்வச் சிலைகளைப் பாதுகாக்க அவற்றின் கைகளில் பாதுகாப்புக் கங்கணம் கட்டப்படும் ரக்‌ஷபந்தனம் சடங்கு நடத்தப்படும்.

நாடி சந்தானம் / ஸ்பர்ஷகுதி

யாகசாலை மற்றூம் அக்னிக் குண்டங்களிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளிக் கயிறுகள் இணைக்கப்பட்டு அது தெய்வங்களுடன் பிணைக்கப்படுவதுதான் நாடி சந்தானம் ஸ்பர்ஷகுதி சடங்கில், யாகசாலை மற்றும் அக்னிக் குண்டங்களிலிருந்து சக்திகள் பரிமாற்றம் செய்யப்படும். இது மூன்று முறை செய்யப்படும்.

மஹா பூர்ணாஹுதி

யாகசாலை பூஜைகளின் நிறைவைக் குறிக்கும் ஒரு சடங்குதான் மஹா பூர்ணாஹுதி.

கடம் புறப்பாடு

யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கும்பங்கள் முழுமையாகச் சக்திகள் ஏற்றப்பட்ட நிலையில் யாகசாலையிலிருந்து இறுதியாக அகற்றப்படும். அவை அர்ச்சகர்களால் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, விமானக் கலசங்கள் இருக்கும் இடங்களைச் சென்றடையும். உரத்த குரலில் மந்திரங்கள் ஜபிக்கப்பாடும் வேளையில், நாத மேளங்கள் முழங்க இந்தச் சடங்கு விமர்சையாக நடத்தப்படும்.

மஹா கும்பாபிஷேகம்

புனித கும்பங்களில் உள்ள புனித நீர் சடங்கு பூர்வமாக விமான கலசங்களின் மீதும் விக்ரகங்களின் மீதும் ஊற்றப்படும். இந்தப் பிரசித்திபெற்ற சடங்குதான் மஹா கும்பாபிஷேகம். புதிய ஆலய நிர்மாணத்தின் புனிதத்துக்கு நிறைவு பூஜையாகவும் இது அமைகிறது. மஹா கும்பாபிஷேகத்துக்கு முன் கருங்கல்லினாலும் பளிங்கினாலும் ஆன சிலைகள் தெய்வச் சக்திகளை உள்ளடக்கிய அற்புத விக்ரகங்களாக இதன் பின் மாறும்.

திருக்கல்யாணம்

தெய்வங்களுக்கு இடையிலான திருக்கல்யாண வைபவத்திலும், திருமண ஊர்வலத்திலும்ம் பக்தர்கள் பங்கேற்கலாம்.

ரதப் புறப்பாடு

மஹா கும்பாபிஷேகப் பூஜைகளிலும் சடங்குகளிலும் பங்கேற்ற பக்தர்களுக்கு உற்சவ மூர்த்திகள், தங்க ரதத்தில் பவனிவந்து அருள் வழங்கும் நிகழ்ச்சி இது. மஹா கும்பாபிஷேகம் முடிந்த நான்காவது நாளில் இந்த ரதப் புறப்பாடு இடம் பெறும்.